To me Rama is a human worthy of worship as much as any except Sri Thyagaraja, who made him the only one worthy of worship by his immortal devotion to him.
A little fun finding my Rama through all my relationships, my brothers(includes cousins), my grandfathers, my father, my friends, my in-laws, my husband, my son, my nephews, their children and my colleagues, as an alternative to painkillers as I isolate through COVID.
Enjoy.
1. Varnam | Bala kandam as Dasaratha sings to Rama
என் வரினும் எதிர்கொள்வேன்
என் தோளென நீ உள்வரை
நன் முனிவரை பின் தொடர்ந்தனை
வன் கணைதனை பின் தொடுத்தனை (என்வரினும்)
பொன் கதிரவன் குலம் வளர்ப்பாய்
2. Invocatory piece | Ayothya kandam as Mandarai sings to Rama
மாவிலை தோரணத்தால் மணி வீதி எங்கும் பந்தலிட்டார்
மாடத்தில் ஆரணங்கியர் மணி மாலைகளால் தீபமிட்டார்
மாமன்னர் மைந்தனுக்கு மணி மகுடமிட ஆணையிட்டார்
மந்தரை நான் என் நினைவில் மணி நொடியில் தூபமிட்டேன்
3. Premain build up | Aranyakandam as Guhan sings to Rama
உம்மில் ஒருவன் என்றதேனையா என்னை (உம்மில்)
வெம்மி திரண்ட கருந்தோளினாய் என்னை (உம்மில்)
இம்மி இடம் கொடா நேர் வழியினாய்
விம்மி தளர்வோர் நில் அணைப்பினாய் (உம்மில்)
4. Pre main | Aranyakandam as Agasthyar sings to Rama
வந்தனை வண்டநயாள் கரம் பற்றி (வந்தனை)
சிந்தனைகொப்பா விநயம் மரைஎன்று (வந்தனை)
தந்தனை நீ கொண்டதனைதையும்
நிந்தனை செத்தாள்வோர் நிலை பிறழ (வந்தனை)
5. Quick cleansing before premain | kishkinda kandam as Vali sings to Rama
அங்கதன் வாழ்வில் வளம் பெருகிடுவீர்
சிங்கச்சிறுவன் என் அருமை புதல்வன் (அங்கதன்)
இங்கிதம் இழந்து, எனை எதிர் கொள்ள அஞ்சி,
மங்கின வேலையில் பின்னின்று மாய்த்தோய் (அங்கதன்)
6. Main in Karahapriya | Kishkinda kandam as Kambar sings through Rama to Sukreeva - original verse 9 from arasiyar padalam, kitkinda kandam in kamba ramayanam, lines rendered as 4, 3, 1, 2 to fit into a keerthanai rendition; the beauty and intent potent in those four lines are immesurable in depth and breath that to me you can derive an entire universal constitution from just these four lines. It has to be the center piece of my poetry on Rama, as it leads to Sudarma, the next chapter in my thesis/book evolving Sapiens.
நகை உடை முகத்தை ஆகி, இன்னுரை நல்கு நாவால்
பகையுடை சிந்தயர்கும் பயன் உரு பண்பின், தீரா (நகை உடை)
புகை உடைத்தென்னின் உண்டு பொங்கு அனல் அங்கு, என்று உன்னும்
மிகை உடைத்து உலகம்; நூலோர் விநயமும் வேண்டற்பாற்றே (நகை உடை)
7. Padam in Harikambodi | Sundara kandam as Sita sings to Rama
மென்மை என்னென்பதறிந்தேன் (மென்மை)
உண்மை ஒன்றே கணைஎன்றெண்ணி
அண்மை அயலெனாது தொடுத்த நான்(மென்மை)
கண்ணிமை வன்மையால் கனிந்த நின்
கண்களின் கனிவினால் கனிந்த நான்(மென்மை)
8. RTP | Sundara kandam as Hanuman sings to Rama
for RTP main ragam
அன்பினள் பிரிவால் துவண்ட நீள் கரம்,
நம்பி துணிந்து செங்கழல் தமை வருடின
variants for ragamaligai swarams the ragam representative of the character;
the idea is to gain Sita’s confidence by using a unique characteristic of rama, his unbiased humility, repeatedly to narrate the story of Rama. The verses reassure Sita of Rama’s love for her, his state on her separation, his commitment to giving unprecedented powers to his alraedy long hands to stretch all the ways to his feet, and no matter who, Rama’s attitude towards them is affection as indicated by how his hands have touched their feet in humility.
அன்பினள் பிரிவால் துவண்ட நீள் கரம்,
தந்தை தயரதன் தண்கழல் தமை வருடின (implied that hand which fell limp in distress not knowing what to do when Sita is separated),
அன்பினள் பிரிவால் துவண்ட நீள் கரம்,
முந்தை சிரமளந்த கழல் தமை வருடின (there is an allusion to vamanar story in balakandam)
அன்பினள் பிரிவால் துவண்ட நீள் கரம்,
உயர் முனிவர் தவ கழல் தமை வருடின (Vasishtar, Viswamithrar)
அன்பினள் பிரிவால் துவண்ட நீள் கரம்,
மங்கை அகலிகை கழல் தமை வருடின
அன்பினள் பிரிவால் துவண்ட நீள் கரம்,
தூய மிதிலயர்கோன் கழல் தமை வருடின
அன்பினள் பிரிவால் துவண்ட நீள் கரம்,
கான் போவென்றனள் கழல் தமை வருடின
அன்பினள் பிரிவால் துவண்ட நீள் கரம்,
குகனுடன் கங்கை தன் கழல் தமை வருடின (they play with the flowing ganga, the feet of the river is all of the river)
அன்பினள் பிரிவால் துவண்ட நீள் கரம்,
பரதன் பால் பாதுகழல் தமை வருடின
அன்பினள் பிரிவால் துவண்ட நீள் கரம்,
பணிவுடன் அகத்தியன் கழல் தமை வருடின
RTP’s main ragam:
அன்பினள் பிரிவால் துவண்ட நீள் கரம்,
நம்பி துணிந்து நீண்டு அவன் கழல் தமை வருடின (final emphasis on how long his hands are)
9. Thillana | Yuda kandam as Ravana sings to Rama
நிலம் கிளறி நின்ற பின் இனி பொரேன் என்
புலன் கிளறி பெய்த நின் நாண் நுணுக்குக்கம் கேட்டுயிர்த்த நான்
நிலம் கிளறி நின்ற பின் இனி பொரேன்
10 Mangalam | Rama pattabishegam as Lava and Kucha recall their parents return to Ayodya
(to me, utharakadam is outdated concept in 2022)
அலர்ந்த செம்பருத்தி பொற் குடைக்கு குடை பிடிக்க
உலர்ந்த சவ்வாது செஞ் சாந்துடன் மணம் கமழ
முதிர்ந்த விற்பன்னர் உளம் குளிர வாழ்த்துரைக்க
அதிர்ந்த மேளத்துடன் அமர்ந்தனர் எமை பெற்ற நல்லோர்
11. vazhthu
வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்
வாழிய பாரத மணி திரு நாடு
வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம்
affectionately,
Sumathy, Sydney
started: Monday 31 JAN 2022
completed: Sunday 6 FEB 2022